சீனிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம்!!

953

சீனி..

இறக்குமதி செய்யப்படும் வெள்ளைச் சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் இறக்குமதி செய்யப்படும் வெள்ளைச் சீனி ஒரு கிலோ கிராமின் அதிகபட்ச விலை 100 ரூபா என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

எனினும் இன்றைய தினம் முதல் இந்த அதிகபட்ச விலை கட்டுப்பாடு நீக்கப்படுவதாக வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.