நேற்று இனங்காணப்பட்ட கொரோனா நோயாளர்கள் தொடர்பான தகவல்!!

490

கொரோனா..

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரேனா நோயாளிகள் 30 பேரில் 22 பேர் கடற்படை சிப்பாய்கள் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கடற்படை சிப்பாய்கள் 20 பேர் வெலிசர கடற்படை முகாமிலும் ஏனைய அதிகாரிகள் இருவர் விடுமுறைக்கு சென்றவர்கள் என இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு மேலதிகமாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான கடற்படை சிப்பாய்களுடன் நெருக்கமாக செயற்பட்ட 7 பேர் எனவும் ஒருவர் குணசிங்கபுர பிரதேசத்தில் இருந்து தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைத்து செல்லப்பட்ட நபர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெலிசர கடற்படை முகாமிற்கு வெளியே பதிவாகிய நோயாளிகள், பதுளை, தலாத்துஓய, ஹோகந்தர மொரொன்துடுவ மற்றும் கந்தளாய் ஆகிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு மக்களின் நலனை கருத்திற்கொண்டே ஊரடங்குச் சட்டம் அவ்வப்போது அமுலுக்கு வருகிறது.இருந்தாலும் இயன்றளவு விரைவில் சுகாதாரத் துறையினரின் ஒத்துழைப்புடன் நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவருவோம்.

அரச புலனாய்வுத் துறையினரின் ஒத்துழைப்புடன் கொரோனா தொற்றுக்குள்ளானோரை பிடித்து வருகிறோம். ஏனெனில் தொற்றுக்குள்ளானவர்கள் பலர் அவர்களுடன் பழகியவர்கள் விபரங்களை மறைப்பதால் இப்படி நடக்கின்றன.

இயன்றளவில் நாங்கள் நிலைமைகளை கட்டுப்படுத்தி வருகிறோம். ஊரடங்கு சட்டத்தை நீடிக்கவே மக்கள் கோருகிறார்கள். நிலைமைகளை பார்த்து சரியான முடிவை அரசு எடுக்கும் என இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

இன்று காலை இடம்பெற்ற விசேட தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இராணுவ தளபதி இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

நேற்றைய தினம் பதிவாகிய நோயாளிகளுடன் இலங்கையில் இதுவரையில் அடையாளம் காணப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 649ஆகும். 7 நாட்களில் 338 நோயாளிகள் பதிவாகியுள்ளனர். அவர்களில் 264 பேர் கடற்படை சிப்பாய்கள் என்பது குறிப்பிடத்தக்கது.