இந்திய வீரர்கள் மீது கவாஸ்கர், டிராவிட் பாய்ச்சல்!!

302

Gavaskarடோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்திடம் ஒருநாள் தொடரை இழந்துள்ளதால் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

இதுகுறித்து முன்னாள் அணித்தலைவரும், வர்ணனையாளருமான கவாஸ்கர் கூறுகையில், தற்போதைய வீரர்களில் சிலர் அரை சதம் கூட எடுக்க முடியாமல் 5,10 அல்லது 20 ஓட்டங்களில் ஆட்டமிழந்து விடுகிறார்கள்.

இவர்களை அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கிண்ணப் போட்டிகளில் எப்படி சேர்க்க முடியும், அவர்களுக்கான இடத்துக்கு உத்தரவாதம் இல்லை. அனுபவம் வாய்ந்த வீரர்களுக்காக அணியின் கதவு தற்போது திறந்து இருக்கிறது.

வயது ஒரு பிரச்சினை கிடையாது, அவுஸ்திரேலிய 20 ஓவர் போட்டி அணியில் 39 வயதில் பிரட் வோக் இடம் பெறவில்லையா என கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் அணித்தலைவர் டிராவிட் கூறுகையில், நியூசிலாந்து சென்ற இந்திய அணியில் வேகப்பந்து வீரர்கள் அனுபவம் இல்லாதவர்கள்.

வேகப்பந்து வீச்சு மிகவும் பலவீனமாக காணப்படுகிறது, உலக கிண்ணப் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் டோனி இதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

முகமது ஷமி, புவனேஸ்வர்குமார், வருண் ஆரான் அனுபவம் இல்லாதவர்கள் என தெரிவித்துள்ளார்.

இந்த தோல்வியின் மூலம் தெரிவு குழுவினர் பல விடயங்களை அறிந்திருக்க வேண்டும் என்றும், மோசமாக விளையாடும் துடுப்பாட்ட வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிப்பது ஏன் எனவும் துலீப் வெங்சர்க்கார் கேள்வி எழுப்பியுள்ளார்.