இங்கிலாந்தின் தொடர் தோல்வியால் அண்டி பிளவர் பதவி விலகல்!!

298

Andy Flowerசமீபத்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி எல்லாப் போட்டிகளிலும் அவுஸ்திரேலியாவிடம் தோற்ற நிலையில் அந்த அணியின் பயிற்சியாளரான அண்டி பிளவர் தனது பதவியிலிருந்து விலகி உள்ளார்.

லோட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அண்டி பிளவர் பதவியில் நீடிக்கக்கூடாது என்று அணியின் புதிய நிர்வாக இயக்குனர் பால் டவுண்டன் தெரிவித்ததாக செய்திகள் குறிப்பிடுகின்றன.

எனினும் அந்நாட்டின் கிரிக்கெட் சபையில் தொடரவிருக்கும் அண்டி பிளவர், லோபோரோவில் உள்ள திறனாய்வு மையத்தில் பணியைத் தொடருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கடினமான நேரத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் பயிற்சியாளர் பதவியை ஏற்ற அண்டி பிளவர் மூன்று ஆஷஸ் வெற்றிகளைப் பெற்று இங்கிலாந்தைத் தரவரிசைப் பட்டியலின் முன்னணிக்குக் கொண்டு சென்றார்.

ஆனால் இங்கிலாந்து வீரரானகெவின் பீட்டர்சனுடனான இவரது தகராறு பற்றிய செய்திகள் தொடர்ந்தன. முகத்திற்கு நேரான தாக்குதல் விமர்சனங்களுக்கு இடையிலும் வெளிநடப்பு செய்யாமல் இங்கிலாந்தின் மறுஎழுச்சி நடைமுறைகளைத் தான் எதிர்நோக்குவதாக அவர் முன்பு குறிப்பிட்டிருந்தார். ஆனால் இப்போது எதிர்கொண்ட தோல்வியை ஏற்றுக் கொள்வது தனக்குக் கடினமாக இருந்தது என்று அவர் கூறினார்.

இங்கிலாந்து கிரிக்கெட்டில் தன்னுடைய ஈடுபாடு குறித்து பெருமைப்படுவதாகக் கூறிய அண்டி பிளவர், தாங்கள் ஒன்றாகப் பணியாற்றிய நாட்களில் பெற்ற வெற்றிகள் குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

கடந்த கால நிகழ்வுகளைத் தர்க்கரீதியாக ஆய்வு செய்து நடந்த தவறுகளை நீக்க கற்றுக்கொள்வதன் மூலம் இங்கிலாந்து கிரிக்கெட் அணி மீண்டும் சரியான பாதையில் தொடரும் என்று தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.