மகனை கடைக்கு அனுப்பிய தாயாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

340

காத்திருந்த அதிர்ச்சி..

இந்தியாவில் கொரோனா லாக்டவுனின் போது மகனை மளிகை சாமான்கள் வாங்க தாய் அனுப்பிய நிலையில், அவர் வீடு திரும்பிய போது மனைவியுடன் வந்தது தாயை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

உத்தரபிரதேச மாநிலத்தில் கசியாபாத்தை சேர்ந்தவர் குட்டு. 26 வயது இளைஞனான இவர் தனது தாயுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் குட்டுவின் தாய் அவரை நேற்று மளிகை கடைக்கு சென்று பொருட்களை வாங்கி வருமாறு அனுப்பினார்.

ஆனால் குட்டு வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிய போது சவீதா என்ற இளம் பெண்ணை தன்னுடன் அழைத்து வந்து இவர் தான் என் மனைவி என தாயிடம் கூற அவர் அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் காவல் நிலையம் சென்ற குட்டுவின் தாய், என் மகனுக்கு நடந்த திருமணத்தை ஏற்று கொள்ள முடியாது என கூறி புகார் அளித்தார். பொலிசார் குட்டுவிடம் விசாரித்த போது அவர் கூறுகையில்,

எனக்கும் சவீதாவுக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்னர் கோவிலில் திருமணம் நடந்தது. ஆனால் திருமணத்துக்கு சரியான சாட்சிகள் இல்லாததால் திருமண பதிவு சான்றிதழை அப்போது என்னால் வாங்க முடியவில்லை.

இரு வாரங்களுக்கு முன்னர் சான்றிதழை வாங்க சென்ற போது லாக்டவுனால் எனக்கு கொடுக்கப்படவில்லை. இதனிடையில் என் மனைவி ஒரு வாடகை விடுதியில் தங்கியிருந்தார். ஆனால் அவரை திடீரென இடத்தை காலி செய்ய சொல்லிவிட்டனர். அதனால் அவரை வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டேன் என கூறினார்.

இதனிடையில் தம்பதியை குட்டுவின் தாய் ஏற்று கொள்ளாத நிலையில் சவீதா தங்கியிருந்த வாடகை விடுதியிலேயே இருவரையும் தங்கவைக்கும் முயற்சியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.