ஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்றுமுன்னர் வெளியான தகவல்!!

739

ஊரடங்கு..

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் மே மாதம் 6 ஆம் திகதி வரையில் முன்னர் அறிவிக்கப்பட்டவாறு இரவு 8 மணிக்கு அமுல்ப்படுத்தப்பட்டு மறுநாள் அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படும்.

மேலும், மே மாதம் 6ஆம் திகதி இரவு 8 மணி தொடக்கம் மே 11ஆம் திகதி வரை நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் ஊரடங்கு உத்தரவு அமுலாகும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்;டுள்ள போதிலும் மக்களின் வாழ்க்கையினையும் நிறுவனங்களையும் கொண்டு செல்லும் நடவடிக்கை எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தவிடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் அத்தியாவசிய சேவைகளை கொண்டு செல்லுதல் உள்ளிட்ட மக்களின் வாழ்க்கை மற்றும் பொருளாதாரத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கு அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் திறக்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.