வவுனியாவில் தராக்கி சிவராமின் நினைவு தினத்தையடுத்து ஊடகவியலாளர்களால் இரத்ததான நிகழ்வு!!

4


இரத்ததான நிகழ்வு..


ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் 15 ஆவது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு வவுனியாவில் ஊடகவியலாளர்களின் இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது.வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று (30.04.2020) இந்த இரத்ததான நிகழ்வு நடைபெற்றது.


வவுனியா வைத்தியசாலை உள்ளிட்ட நாட்டின் இரத்த வங்கிகளில் குருதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஊடகவியலாளர்களால் இரத்தானம் முன்னெடுக்கப்பட்டது.


ஊடகவியலாளர்கள், இளைஞர்கள், யுவதிகள் எனப்பலரும் கலந்துகொண்டு இதன்போது குருதிக் கொடையளித்தனர். ஆண்டு தோறும் தராக்கி சிவராமின் நினைவாக இரத்ததானம் வழங்கவுள்ளதாகவும் இதன்போது ஊடகவியலாளர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.