சாதனைக்கு வயது தடை இல்லை : 102 வயது முதியவரின் புதிய சாதனை!!(வீடியோ)

467

Cycle

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 102 வயது முதியவர் சைக்கிள் பந்தயத்தில் புதிய சாதனை படைத்துள்ளார்.

பிரான்சில் 100 வயதை எட்டியவர்களுக்கான சைக்கிள் பந்தயம் நடைபெற்றது, அதில் 102 வயது ரொபர்ட் மாசாந்த் என்பவர் பங்கேற்று ஒரு மணி நேரத்தில் 16.7 மைல் தூரத்தை வெற்றிகரமாக கடந்து முதலிடம் பிடித்தார்.

இந்த வரிசையில் அது உலக சாதனையாகும். அதுமட்டுமல்ல 2 ஆண்டுக்கு முன் இவர் புரிந்த சாதனையை மீண்டும் அவரே முறியடித்து விட்டார்.