வவுனியாவில் சிகையலங்கார நிலையங்கள் மூடப்பட்டுள்ளமையால் 500 குடும்பங்கள் பாதிப்பு!!

479

சிகையலங்கார நிலையங்கள்..

சிகையலங்கார நிலையங்கள் மூடப்பட்டுள்ளமையால் 500 வரையிலான குடுமபங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா அழகக கூட்டுறவுச் சங்க பொருளாளர் அந்தோனிப்பிள்ளை கிருபைராசா தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் உள்ள அழகக சங்க தொழிலாளர்களின் நிலை தொடர்பில் இன்று கேட்ட போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

செட்டிகுளம் தொடக்கம் ஓமந்தை வரையிலான எமது சங்கத்தில் உள்ள எமது அழககங்களை உள்ளடக்கி வவுனியா மாவட்ட அழகக கூட்டுறவுச் சங்கமாக பதிவு செய்துள்ளோம். கொரோனா தாக்கம் காரணமாக எமது தொழில் செய்யும் 500 வரையிலான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

அவர்கள் நாளாந்தம் இந்த தொழிலை நம்பியே வாழ்ந்து வந்தார்கள். கடந்த ஒன்றரை மாதங்காளக சுகாதார அதிகாரிகளின் கோரிக்கைக்கு அமைவாக மூடியுள்ளோம்.

எமது பாதுகாப்பு மட்டுமல்ல சமூக பாதிகாப்பையும் கருத்தில் கொண்டு நாம் மூடியிருக்கின்றோம். இதனால் எமது சங்க உறுப்பினர்கள் பலரது குடும்பங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. வேறு தொழில் செய்ய முடியாதவர்களாக உள்ளனர்.

எனவே அரசாங்கம் பாதுகாப்பான சுகாதார வழிமுறைகளை ஏற்படுத்தி திறப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும். அல்லது எமது தொழிலாளர்களுக்கான இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.