கொரோனா வைரஸ் மேலும் இரண்டு வருடங்கள் உலகம் முழுவதும் பரவும்!!

438

கொரோனா வைரஸ்..

கொவிட் -19 என்ற கொரோனா வைரஸ் மேலும் சுமார் இரண்டு வருடங்களுக்கு உலகம் முழுவதும் பரவும் என அமெரிக்கா தொற்று நோய் தொடர்பான விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் இதுவரை 2 லட்சத்து 39 பேர் 652 பேர் உயிரிழந்துள்ளனர். 34 லட்சத்து 2 ஆயிரத்து 435 பேர் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

அதேவேளை ரஷ்ய பிரதமர் மிகாய்ல் மிஸ்டீனுக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பதாக நேற்று முன்தினம் இரவு அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் குணமடைந்த நிலையில், ரஷ்ய பிரதமருக்கு அந்த நோய் தொற்றியுள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடீமீர் புட்டின் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இதனால், பிரதமர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் புட்டின் கூறியுள்ளார்.

ரஷ்யாவில் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 431 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன் அங்கு இதுவரை ஆயிரத்து 169 பேர் இந்த வைரஸ் காரணமாக இறந்துள்ளனர். 13 ஆயிரத்து 220 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.