வவுனியா மகாகச்சகொடி கிராமம் தொடர்ந்தும் முடக்கம் : சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்த 21 குடும்பங்கள் விடுவிப்பு!!

506

21 குடும்பங்கள் விடுவிப்பு..

கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படை வீரரின் வவுனியா, மகாகச்சகொடி கிராமம் தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ளதுடன், அக் கிராமத்தில் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்த 21 குடும்பங்கள் இன்று சுகாதார திணைக்களத்தினரால் விடுவிக்கப்பட்டனர்.

வெலிசறை கடற்படை முகாமில் இருந்து விடுமுறையில் வந்த நிலையில் கொரோனா தொற்று உள்ளவராக கடந்த ஞாயிற்றுக்கிழமை கடற்படை வீரர் ஒருவர் இனங்காணப்பட்டதையடுத்து முடக்கப்பட்ட குறித்த கடற்படை வீரரின் மகாகச்சகொடி கிராமம் தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ளதுடன்,

குறித்த கடற்படை வீரரின் அயலில் வசித்தவர்கள் மற்றும் இரண்டாம் நபர் மூலம் தொடர்பை பேணியர்கள் ஆகியோரிடம் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என தெரிய வந்தையடுத்து 21 குடும்பங்கள் மகாகச்சகொடி கிராமத்தில் சுய தனிமைப்படுத்திலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், குறித்த கடற்படை வீரருடன் தொடர்பை பேணியதாக பம்பைமடுவில் தங்கவைக்கப்பட்டுள்ள 9 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.

மேலும், மகாகச்சகொடி கிராமம் தவிர குறித்த கடற்படை வீரர் சென்ற வர்த்தக நிலையங்கள், காப்புறுதி நிறுவனங்கள், அரச திணைக்களங்கள் என்பவற்றைச் சேர்ந்த 115 பேர் தொடர்ந்தும் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.