கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையை பூச்சியமாக மாற்ற முடியாது!!

320

கொரோனா நோயாளிகள்..

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை பூச்சியமாக மாற்ற முடியாது என டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவுகையை கட்டுப்படுத்தக்கூடிய ஓர் நிலைமை உருவாகியுள்ளது.

என்ற போதிலும் அதனை பூச்சிய எண்ணிக்கையில் பேணுவது நடைமுறைச்சாத்தியமற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று பரவுகையை கட்டுப்படுத்தும் வகையில் செயற்பட வேண்டும் எனவும் சமூக இடைவெளியை பேணுவது மிகவும் அவசியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகில் எற்கனவே ஏற்பட்ட நோய் பரவுகையைப் போன்றே கொரோனா வைரஸ் தொற்று பெரும்பரவுகையும் சமூகத்தில் எதிர்காலத்தில் தோன்றும் பின்னர் மறையும் நிலைமை உருவாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய ஓரே நோய் கொரோனா கிடையாது எனவும் ஏனைய நோய்கள் தொடர்பில் கவனத்தை குறைப்பது ஆரோக்கியமானதல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு நோய்களைக் கட்டுப்படுத்தி மக்களின் இயல்பு வாழ்க்கை முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை பரவுகைகள் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் உண்டு என டொக்டர் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-