பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட தகவல்!!

520

பாடசாலைகளை மீள ஆரம்பித்தல்..

இரண்டாவது தவணைக்காக மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிக்கும் திகதி இன்னும் தீர்மானிக்கவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஜுன் மாதம் 16ஆம் திகதி வரை பாடசாலை ஆரம்பிக்கும் திகதி பிற்போடப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. எனினும் அந்த தகவல்களில் உண்மையில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மே மாதம் 11ஆம் திகதி இரண்டாம் கல்வி தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என அரசாங்கம் இதற்கு முன்னர் அறிவித்தது.

எனினும் நேற்றைய தினம் பாடசாலை ஆரம்பிக்க முடியாதென சிறுவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஒகஸ்ட் மாதம் இடம்பெறவிருந்த உயர்தர பரீட்சை தொடர்பில் சிறுவர்கள் பிரதமரிடம் வினவிய போது, அதற்கு இரண்டு மாற்று வழிகள் உள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

உயர்தர பரீட்சையின் திகதியை மாற்றுவது ஒரு வழியாகும். கற்பித்து நிறைவு செய்த பாடங்களில் இருந்து மாத்திரம் கேள்விகளை தயாரிப்பது இரண்டாவது மாற்று நடவடிக்கையாகும். எப்படியிருப்பினும் இது தொடர்பில் இறுதி தீர்மானத்திற்கு இன்னமும் வரவில்லை என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.