இலங்கையில் குணமடைந்த நபருக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டது எப்படி?

378

கொரோனா தொற்று..

ஜாஎல பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய குணமடைந்த நபர் ஒருவர் மீண்டும் கொரோனா தொற்றுக்குள்ளாகியதாக நேற்று செய்தி வெளியாகியது. இந்த நிலையில் குறித்த நபருக்கு கொரோனா தொற்றியமை தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நபர் கடந்த மாதம் 17ஆம் திகதி முதல் முறையாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியதாக உறுதியாகிய பின்னர் IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜாஎல பிரதேசத்தை சேர்ந்த 67 வயதுடைய குறித்த நபர் ஒரு மாத காலம் சிகிச்சை பெற்று கடந்த 17ஆம் திகதி மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார்.

வீட்டிற்கு வந்த நபர் 14 நாட்கள் சுயதனிமைபப்படுத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி நெஞ்சு வலி ஏற்பட்டமையினால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் இந்த நபருக்கு மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றியமை உறுதியாகியுள்ளது.

அதற்கமைய இந்த நபர் மீண்டும் IDH வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கொரோனா தொற்றுக்குள்ளான இந்த நபர் சிறுநீர் மற்றும் நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டவராகும். அவர் இத்தாலியில் இருந்து வந்த நபருடன் பழகியமையினால் மீண்டும் கொரோனா தொற்றிற்குள்ளாகியிருக்கலாம் என வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் இந்த நோயாளியின் வீட்டில் இருந்த நால்வர் சுயதனிமைப்படுத்தலுக்குற்படுத்தப்பட்டுள்ளனர்.