
காளகஸ்தி கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளாராம் காஜல் அகர்வால்.
காஜலுக்கு இந்த வருட தொடக்கத்தில் விஜய் ஜோடியாக நடித்த ஜில்லா படம் சிறப்பாக அமைந்தது. தற்போது ஸ்ரீகாந்த், ராம்சரனுடன் தெலுங்கு படமொன்றிலும் பாலாஜி மோகன் இயக்கும் தமிழ் படத்திலும் நடிக்கிறார்.
இந்நிலையில் காஜல்அகர்வால் தனது குடும்பத்தினருடன் காளகஸ்தி சிவன் கோவிலுக்கு திடீரென சென்றார். அங்கு ராகு கேது பூஜையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்த அவர் கோவிலை சுற்றி வந்தும் வணங்கினார்.
காஜல்அகர்வாலை காண பக்தர்கள் திரண்டனர். ஆட்டோ கிராப் வாங்கவும் முண்டியடித்தார்கள். அவர்களை பார்த்து சிரித்தபடி கையசைத்து விட்டு காரில் ஏறி புறப்பட்டுச் சென்றுவிட்டார்.





