பிந்து மாதவியின் ஆசை!!

276

Bindh Madavi

கழுகு படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த பிந்து மாதவி, கேடி பில்லா கில்லாடி ரங்கா மூலம் பேசப்படும் நடிகையாகி விட்டார்.

தமிழ் சினிமாவில் நுழையும் நடிகைகள் முன்பெல்லாம், ரஜினி- கமலுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று கூறுவர். ஆனால் தற்போதுள்ள நடிகைகளோ அஜித்துடன் நடிக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.

லேட்டஸ்ட்டாக இந்த பட்டியலில் பிந்து மாதவியும் இடம் பெற்றுள்ளார். தெலுங்கு சினிமாவில் கிளாமர் வேடங்களில் நடித்து வந்த என்னை, தமிழ் சினிமா தான், குடும்பப் பாங்கான வேடங்கள் கொடுத்து நல்ல நடிகையாக்கியது.

தமிழ் சினிமாவில் நான் சாதிக்க வேண்டியது அதிகம் உள்ளது, பணம் கிடைக்கிறது என்பதற்காக உடனடியாக எந்த படத்திலும் நடிக்க ஒப்புக் கொள்வது இல்லை. கதை பிடித்தால் தான் ஒப்புக் கொள்கிறேன், அதிலும் தமிழில் அஜீத்துடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளதாக தெரிவித்துள்ளார்.