ஹொலிவுட் பாணியில் தயாராகும் அஜித்தின் படம்!!

516

Ajith

வீரம் படத்திற்கு பிறகு அஜித், கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்பதுதான் தற்போது தமிழ் திரையுலகின் பெரிய கிசுகிசுவாக உள்ளது. தற்போது இந்த படம் பற்றிய சில தகவல்கள் வந்துள்ளன.

நாம் எல்லோரும் இந்த படமும் அஜித் நடிக்கும் வழக்கமான படம்தானே என்று கணக்கு போட ஆனால் இயக்குநர் கௌதம் மேனன் புது கணக்கு போட்டுள்ளாராம்.

மங்காத்தா படத்திற்கு பிறகு சால்ட் அன்ட் பெப்பரில் நடித்து வந்த அஜித்தை இப்போது மீண்டும் பில்லா ரேஞ்சிற்கு ஸ்டைலாக மாற்றபோறாராம் கௌதம் மேனன்.

அதுவும் இதுவரை எந்தவொரு இந்தியபடமும் இதுபோல் ஸ்டைலிஷாக வரவில்லை என்று சொல்லுமளவிற்கு இதற்காக மேக்கப் மேனிலிருந்து, சண்டைபயிற்சாளர் வரை அனைவரையும் ஹொலிவுட் கலைஞர்களையே தேர்வு செய்யபோகிறாராம். படப்பிடிப்பு முழுக்க அமெரிக்காவில் நடைபெறவுள்ளதாகவும் தெரியவருகிறது.

இதை தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்திடம் சொல்ல நான் அஜித்தை நம்பி எவ்வளவு பணம் வேண்டுமானாலும் போட தயார் ஆனால் படம் இதுவரை இல்லாத அளவிற்கு வரவேண்டும் என்று சொல்லியிருக்காராம். இதனால் கௌதம் மேனன் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளாராம்.