கதிரவெளி கடற்கரையில் மியன்மார் படகு!!

486

Miyanmar

மட்டக்களப்பு, வாகரை பிரதேசம் – கதிரவெளி கடற்கரையில் மூங்கில் மரங்களைக் கொண்டு கட்டப்பட்ட மியன்மார் நாட்டு படகு ஒன்று கரையொதுங்கியுள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

பாரிய மூங்கில் மரங்களைக் கட்டப்பட்ட குறித்த படகு நேற்று சனிக்கிழமை கரையொதுங்கியுள்ளது. கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த இப்படகினை கரையிலிருந்த மீனவர்களும் பொதுமக்களும் கரைக்கு இழுத்து வந்துள்ளனர்.

இதேபோன்றதொரு படகு ஒன்று கடந்த வாரம் வடக்கே வடமராட்சியிலும், கிழக்கில் காத்தான்குடி பிரதேச கடற்கரையில் கரையொதுங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



இதேவேளை இப்படகினை வாகரை பொலிசார் தமது பாதுகாப்பில் வைத்துள்ளதுடன் பொதுமக்களின் பார்வைக்கு வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.