மன்னார் புதைகுழி விசாரணை கோரி ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு : செல்வம் அடைக்கலநாதன்!!

317

Selvamமன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியில் இருந்து 55 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டமை தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணையை கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இதனை தெரிவித்துள்ளார்.

மன்னார் சிவில் சமூகம் மற்றும் பொதுமக்கள் அமைப்புக்கள் என்பன இணைந்து இந்தப்போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளன.
இது தொடர்பில் இன்று கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாகவும் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.