அடையாள அட்டை இலக்க நடைமுறை மே 11ஆம் திகதிக்கு பின் அமுலுக்கு வருகிறது!!

457

அடையாள அட்டை இலக்க நடைமுறை..

இலங்கையில் தேசிய அடையாள அட்டைகளில் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்ல அனுமதிக்கப்படும் நடவடிக்கை எதிர்வரும் 11ஆம் திகதிக்கு பின்னரே நடைமுறைக்கு வரும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே இந்த நடைமுறை திகதி குறித்த உரியமுறையில் அறிவித்தல்கள் விடுக்கப்பட்டிருக்கவில்லை.

இந்தநிலையில் 11ஆம் திகதி நாட்டில் இயல்புநிலை கொண்டு வரப்பட்டபின்னர் ஊரடங்கு அமுல்செய்யப்படும் இடங்களிலேயே தேசிய அடையாள அட்டை இலக்கங்கள் மூலம் வெளியில் செல்லும் நடைமுறை அமுலுக்கு வரும் என்று ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

-தமிழ்வின்-