இலங்கை வைத்தியரின் அனுபவம்..
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மீண்டு வந்த விசேட வைத்தியர் பிரியங்கர தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார். நேற்றைய தினம் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மார்ச் மாதம் 19ஆம் திகதி கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட வைத்தியர் தற்போது பூரண குணமடைந்து மீண்டும் தனது பணிகளை ஆரம்பித்துள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்டவர்,
“மார்ச் மாதம் 18ஆம் திகதி உறங்க செல்ல முன் பல் துலக்க சென்றேன். என்றுமே இல்லாத அளவு புதுவிதமான தொண்டை வலி ஒன்றை அன்று இரவு உணர்ந்தேன். மீண்டும் காலை எழுந்து பல் துலக்க செல்லும் போதும் மீண்டும் அதே வலியை உணர்ந்தேன்.
சாதாரணமாக ஒருவருக்கு ஏற்படும் தொண்டை வலிக்கும் இந்த வலிக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. இதனால் 30 வருட நண்பரான வைத்தியர் ஒருவருக்கு அழைப்பேற்படுத்தி இதனை கூறினேன். நான் மருத்துவ பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும் என கூறினேன்.
எனக்கு பு கைப்பிடிக்கும் பழக்கம் இல்லாமையினால் சற்று அ ச்சமடைந்தேன். உடலில் சோர்வு தன்மையை உணர்ந்தேன். ஒரே நேரத்தில் நிறைய ஊசிகளை தொண்டையில் குத்துவதனை போன்ற வலி ஏற்பட்டது.
பின்னர் நானும் IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டேன். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. வைத்தியர் என்ற ரீதியில் இதனை சாதாரண நோய் என்று உணர வேண்டும் என்பதனை மனதில் நினைத்துக் கொண்டேன்.
ஏனைய நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்ட அதே மருந்து வகைகள் எனக்கும் வழங்கப்பட்டது. கஞ்சி நான் குடிக்கவில்லை. உப்பு நீரில் தொண்டையை கழுவினேன். ஆவி பிடித்தேன். ஆரம்பத்திலேயே சென்றமையால் சீக்கிரமாக குணமடைந்து வீடு திரும்பினேன்” என வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.