நன்றி தெரிவித்த மஹிந்த..
தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விசேட நன்றி தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற முன்னாள் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டமை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் உட்பட கட்சியின் உறுப்பினர்களுக்கு, பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்.
அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைக்கப்பட்டு, புதிய யோசனைகள் இருப்பின் அதனை ஆராய்ந்து அவசியமான வேலைத்திட்டங்கள் தொடர்பில் கருத்து பகிர்வதற்கே இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் உட்பட குழுவினருக்கு விசேட நன்றியை தெரிவிக்க வேண்டும். நாட்டு மக்களின் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கும், அவர்களின் கருத்துக்களை பகிர்வதற்கு இங்கு வந்தவர்கள் தொடர்பிலும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.