எனது தந்தையார் விட்டுச்சென்ற பணியை முன்கொண்டு செல்வேன் : ஹிருனிகா!!

537

Kirunikaஎனது தந்தையார் மக்களுக்காக நிறைவேற்ற திட்டமிட்ட வேலைத் திட்டங்களை முன்கொண்டு செல்ல வேண்டும். இதற்காகவே நான் அரசியலுக்கு வந்தேன். என்று மத்திய கொழும்பு ஸ்ரீ. ல. சு. கட்சி இணை அமைப்பாளர் ஹிருனிகா பிரேமச்சந்திர தெரிவித்தார்.

ஆக்ரோஷத்தில் இருந்து என்னை விடுவித்து, சரியான பாதையில் கொண்டு சென்றவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச என்றும் அவர் தெரிவித்தார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

கொழும்பு மாவட்ட ஸ்ரீல. சு. கட்சி செயற்பாட்டாளர்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இன்று எதிர்க்கட்சிக்கு கூறுவதற்கு ஒன்றும் இல்லை. அதனால் அவர்கள் ஜனாதிபதிக்கும், அரசுக்கும் சேறு பூசப்பார்க்கின்றனர்.



ஜெனீவா மாநாட்டை இலக்கு வைத்து தவறான அறிக்கைகளை வெளியிடுகின்றனர். அபிவிருத்தியைச் சீர்குலைக்கவும், இனவாதத்தைக் கிளப்பவும் இவர்கள் செயற்படுகின்றனர்.

எனது தந்தை பிரச்சினைகளை மனிதப் பார்வையிலேயே நோக்கினார். அவர் குறுகிய அரசியல் அபிப்பிராயங் களைக் கருத்திற்கொள்ளவில்லை. அவரின் பணிகளைத் தொடர்வதே எனது பொறுப்பாகும்.

ஜனாதிபதியின் பெயர் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும். பயங்கரவாதத்தில் இருந்து நாட்டைமீட்டு அபிவிருத்தியை அவர் உருவாக்கினார் என்றும் அவர் கூறினார்.