கொரோனா காட்டுத்தீ போல் பரவும் : அமெரிக்க மருத்துவர் எச்சரிக்கை!!

439

கொரோனா..

மனிதர்கள் சமூக இடைவெளியை கவனத்தில் கொள்ளாது கூட்டம் கூட்டமாக கூட ஆரம்பித்தால், கொவிட்-19 என்ற கொரோனா வைரஸ் காட்டுத்தீ போல் பரவக் கூடும் என அமெரிக்காவின் தொற்று நோய் தொடர்பான நிறுவனத்தின் பணிப்பாளர் மருத்துவர் அந்தனி பௌசி எச்சரித்துள்ளார்.

இந்த வைரசுக்கு ஒருவரிடம் இருந்து மற்றுமொருவருக்கு பரவும் விசேடமான இயலுமை இருப்பதுடன் வினைத்திறன் உள்ளது. காட்டுத்தீ போல் பரவும் மிகப் பெரிய இயலுமை இந்த வைரசுக்கு இருக்கின்றது என்பது எமக்கு தெரியும். இதனை பொதுவான மற்றும் தனிமையான சம்பவமாக கண்டுள்ளோம்.

மக்கள் அனைவரும் கூட்டம், கூட்டமாக நெருக்கமாக காணப்பட்டால் இந்த வைரஸ் வேகமாகவும் இலகுவாகவும் பரவும் என்பது தெளிவானது. இதுவரை பார்த்த வைரஸ்களை விட இது வேகமாக பரவக் கூடியது.

உங்களுக்கு ஏதேனும் ஒன்றை குறைத்துக்கொள்ள சந்தர்ப்பம் இருக்கும் போது, நீங்கள் அதனை கவனத்தில் கொள்ளாது பின்நோக்கி இழுக்க ஆரம்பித்தால் தொடர்ந்தும் வைரஸ் தொற்றிய நோயாளிகளை நீங்கள் எதிர்பார்க்கலாம். மரணங்களை எதிர்பார்க்கலாம் எனவும் மருத்துவர் அந்தனி பௌசி குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக அமெரிக்காவில் முடக்கல் நடவடிக்கைகளை நீக்க கோரி நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் மட்டுமல்லாது வரையறைகள் தளர்த்தப்பட்டுள்ள சில மாநிலங்களில் பலர் சமூக இடைவெளி சட்டத்தை மீறி நடந்துக்கொள்கின்றனர் என்பதுடன் பலர் முக கவசங்களை கூட அணியாமல் இருப்பதை காண முடிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.