யாழில் 21 அடி உயரமான சிவபெருமான் சிலை திருக்குடமுழுக்கு!!(படங்கள்)

454

மாதகல்- சம்பில்துறை சம்புநாத ஈஸ்வரர் ஆலயத்தில் சிவதொண்டர் அமைப்பால் அமைக்கப்பட்ட வட மாகாணத்திலேயே உயரமான சிவபெருமானின் 21 அடி உயர தியான திருச்சொரூபத்திற்கான திருக்குடமுழுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை செந்தமிழ் திருமறையில் நடைபெற்றது.

இதேவேளை சம்புநாத ஈஸ்வரர் ஆலயத்தைச் சூழவுள்ள ஆலயங்களிலிருந்து சிவனடியார்களால் ஓம் நமசிவாய மந்திர பாராயணத்துடன் பூரண கும்பங்கள் கொண்டுவரப்பட்டு சம்புநாத ஈஸ்வரருக்கு அபிசேகம் செய்யப்பட்டது.

இலங்கையிலேயே இந்த ஆலயத்தில் தான் முதன் முதலாக செந்தமிழ் திருமறையில் திருக்குடமுழுக்கு இடம்பெறவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

J1 J2 J3 J4 J5 J6