வவுனியாவில் சிறிசபாரத்தினத்தின் 34வது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு!!

14


நினைவேந்தல்..


தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறிசபாரத்தினம் படுகொ லை செய்யப்பட்டு இன்றுடன் 34வது வருடத்தின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (05.05.2020) வவுனியா குருமன்காடு பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியின் மண்டபத்தில் சிறி தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தினரால் (சிறி ரெலோ) அனுஷ்டிக்கப்பட்டது.சிறிரெலோ இளைஞர் அணி தலைவர் பரமேஸ்வரன் கார்த்தீபன் தலமையில் மதியம் 1.30 மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்வில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மூத்த தளபதிகளான அஜித், அன்ரன், சங்கர் ஆகியோர் பிரதான ஈகைச்சுடரினை ஏற்றி வைத்திருந்தனர்.


தொடர்ந்து கட்சியின் முக்கியஸ்தர்கள், வெங்கலச்செட்டிகுளம் பிரதேச சபை தவிசாளர் அந்தோணி, வெங்கலச் செட்டிகுளம் பிரதேச சபை உறுப்பினர்களான சாந்தமேரி, ஜூட், சந்துரு ஆகியோருடன் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உறுப்பினரான விஜயகுமார், மற்றும் சிறி ரெலோ இளைஞணியினரும் சுடர்களை ஏற்றியதுடன் மலர் அஞ்சலி செலுத்தி நினைவேந்தலை உணர்வுபூர்வமாக அனுஷ்டித்திருந்தனர்.


இதேவேளை முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளிலும் சிறி தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தினர் இன்றைய தினம் நினைவேந்தலை அனுஷ்டித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.