வடக்கு இளைஞர்களை போதைக்கு அடிமையாக்க முயற்சி : சீ.வி.விக்னேஸ்வரன்!!

653

CVவடமாகாணத்தில் இளைஞர் யுவதிகள் மத்தியில் போதைப் பொருள் பழக்கத்தை உண்டுபண்ணி அவர்களை திசைதிருப்ப முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவிக்கின்றார்.

வலிகாமம் தென்மேறகுப் பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

வலி தென்மேற்கு இளைஞர் கழக சம்மேளனததின் இரண்டாவது வருடாந்த இளையோர் மாநாடு நேற்று மானிப்பாய் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் வட மாகாண முதலமைசசர் சீ.வி.விக்னேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பல பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.



இதேவேளை வல்லாட்சி செய்வது வருத்தத்தையே உண்டு பண்ணும் என்பதை கண்கூடாக கண்டமையாலே உலகத்தின் பல நாடுகள் ஜனநாயகத்தை கட்டிக்காத்து வருவதாக முதலமைசசர் சீ.வி.விக்னேஸ்வரன் மேலும் குறிப்பிட்டார்.