விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக புரளியைக் கிளப்பிய இலங்கையர் சுவீடனில் கைது!!

533

Arrestவிமானத்தில் வெடிகுண்டு இருப்பதாகக் கூறி புரளியைக் கிளப்பிய இலங்கையர் சுவீடனில் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுவீடனின் ஸ்டொக்கொம் அர்லான்டா விமான நிலைய அதிகாரிகள் குறித்த நபரை கைது செய்துள்ளதாக தெரியவருகிறது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

டுபாயிலிருந்து சுவீடன் நோக்கிப் பயணம் செய்த எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விமானம் பறக்க ஆரம்பமாகி சில நிமிடங்களில் குறித்த நபர் குண்டுப் புரளியை ஏற்படுத்தி மக்களை அச்சுறுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.



சந்தேகநபர் சுவீடன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.