வவுனியாவில் நீண்ட நாட்களின் பின்னர் கடும் மழை : மகிழச்சியில் மக்கள்!!

718

கடும் மழை..

நீண்ட நாட்களின் பின்னர் வவுனியாவில் இன்று (07.05.2020) பிற்பகல் 2.30 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை காற்று மற்றும் இடி மின்னல் ஆகியவற்றுடன் தொடர்ச்சியாக பெய்த கடும் மழையினால் வீதிகள் அனைத்தும் நீர் நிரம்பி வெள்ளகாடாக காட்சியளிக்கின்றது.

இரண்டரை மணித்தியாலங்கள் நீடித்த மழையினால் வவுனியா – மன்னார் வீதி , நூலக வீதி , வைரவப்புளியங்குளம் ஆகிய பகுதிகளில் வெள்ளநீர் வீதிகளில் தேங்கி நிற்பதுடன் தாழ்நில பிரதேசங்களும் நீரில் மூழ்கியுள்ளன. வடிகான்கள் சீர் செய்யப்படாமையாலேயே மழை நீர் வீதியில் தேங்கி நிற்பதினை அவதானிக்க கூடியதாகவுள்ளது.

குறிப்பாக வவுனியா மாவட்டத்தில் கடும் வெப்பநிலை காரணமாக குடிநீருக்கு பலத்த தட்டுப்பாடு நிலவிய வேளையில் மழை பெய்தமையினால் பொதுமக்களும் நன்மையடைந்துள்ளனர்.