கொழும்பில்..
கொழும்பின் புறநகர் பகுதியான பிலியந்தலை பிரதேசத்தில் உள்ள மருந்து விற்பனை நிலையத்தில் நபர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். அந்தப் பகுதியை சேர்ந்த 66 வயதுடைய நபரே நேற்று மாலை உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மரணம் தொடர்பிலான பிரேத பரிசோதனையில் குறித்த நபர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளதென செய்தி வெளியாகியுள்ளது.
மாரடைப்பிற்காக அவர் மருந்து பெற்றுக் கொள்வதற்கு மருந்தகத்திற்கு சென்றுள்ளார். இதன் போதே உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. எனினும் அவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அந்தப் பகுதி மக்கள் அ ச்சம் வெளியிட்டுள்ளனர்.
-தமிழ்வின்-