வவுனியா பம்பைமடு குப்பை மேட்டில் தீப்பரவல் : தடுக்கப்பட்ட பாரிய அனர்த்தம்!!

522

தீப்பரவல்..

வவுனியா – பம்பைமடு குப்பைமேட்டில் இன்று(07.05) காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக உடனடியாக வவுனியா நகரசபையின் தீயணைப்பு பிரிவிற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு பிரிவினர் தீப்பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதனால் அருகில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதிக்கு தீ பரவிச் செல்லாது தடுக்கப்பட்டதுடன், பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.