கொரோனா நோயாளிகள்..
இன்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 7 கொரோனா நோயாளிகளில் 6 பேர் கடற்படை சிப்பாய் என தகவல் வெளியாகியுள்ளது. மற்றைய நபர் கடற்படை சிப்பாயுடன் நெருக்கமாக செயற்பட்டவர் என தெரியவந்துள்ளது.
இந்த 7 கொரோனா நோயாளிகளுடன் இலங்கையில் இதுவரையில் அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 804ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இன்றைய தினம் கடற்படை சிப்பாய்கள் இருவர் குணமடைந்துள்ளனர். அதற்கமைய இதுவரையில் இலங்கையில் 232 பேர் முழுமையாக குணமடைந்துள்ள நிலையில் 563 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.