பெண் மரணம்..
வெலிகம பிரதேசத்தில் பெண் ஒருவர் உ யிரிழந்த பின்னர் தகனம் செய்யும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கு இன்று காலை பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
நீண்ட காலமாக நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த வெலிகம அழுத் வீதி பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இன்று காலை 6 மணியளவில் ஆபத்தான நிலையில் இருந்தமையினால் மோட்டார் வாகனம் மூலம் மாத்தறை நகரத்தில் உள்ள வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு வைத்திய ஆலோசனைக்கமைய அரச வைத்தியசாலையில் அனுமதியாகாமல் மீண்டும் வீட்டிற்கு சென்ற போது குறித்த பெண் இடையிலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பின்னர் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை தகனம் செய்வதற்கு உறவினர்கள் அவசியமான நடவடிக்கைகளை மேற்கொண்ட போது, பொலிஸார் அதனை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
மீண்டும் சடலத்தை மாத்தறை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.