வவுனியாவில் வெசாக் வாரம் அமைதியாக முன்னெடுப்பு!!

15


வெசாக் வாரம்..


வெசாக் வாரம் வவுனியாவில் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டது. மே மாதம் பௌர்ணமி தினம் புத்தரின் பிறப்பு மற்றும் பரிநிர்வாணம் என்பவற்றை நினைவுபடுத்தி வெசாக் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.இம்முறை கொவிட் 19 வைரஸ் தா க்கம் காரணமாக அமைதியான முறையில் சுகாதார முறைகளையும், அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களையும் பின்பற்றி வவுனியாவில் வெசாக் வாரம் அனுஸ்டிக்கப்படுகிறது.


அந்த வகையில் வவுனியா பொலிஸ் நிலையம் முன்னால் சிறிய வெசாக் கூடுகள் அமைக்கப்பட்டும் பௌத்த கொடிகள் பறக்க விடப்பட்டும் அமைதியாக ஊரடங்கு நேரத்திலும் வெசாக் வாரம் அனுஸ்டிக்கபப்படுகிறது.