செட்டிக்குளம் பகுதியில்..
வவுனியா செட்டிக்குளம் வீரபுரம் பகுதியில் இளைஞர் மீது அயல் வீட்டார் நேற்று முன்தினம் (05.05.2020) மாலை மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரு தரப்பினருக்கும் இடையே இருந்த கருத்து முரண்பாடு காரணமாக குறித்த இளைஞன் மீது அயல் வீட்டார் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த இளைஞன் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இத் தாக்குதல் சம்பவத்தில் செட்டிக்குளம் வீரபுரம் பகுதியினை சேர்ந்த 30வயதுடைய கார்த்திகேசு தவநேசன் என்பவரே படுகாயமடைந்தவராவார்.
தாக்குதல் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.