கொரோனா வைரஸ்..
ரூமேனியாவில் உள்ள இலங்கையர்கள் 7 பேர் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளதாக உறுதியாகியுள்ளது. வட ரூமேனியாவில் போடோசானி பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடை தொழிற்சாலையில் பணி செய்யும் இலங்கையர்கள் 7 பேர் இவ்வாறு வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
குறித்த ஆடை தொழிற்சாலையில் 44 இலங்கையர்கள் பணி செய்து வரும் நிலையில் நீக்கப்பட்ட 7 இலங்கையர்களுக்கு கொரோனா தொற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.
பணிக்கு வருகைத்தராத காரணத்தினால் குறித்த ஊழியர்கள் அந்த நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஆடை தொழிற்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரூமேனியாவில் பரவும் கொரோனா வைரஸ் அச்சத்தில் குறித்த இலங்கையர்கள் பணிக்கு செல்லாமல் இருந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எப்படியிருப்பினும் ஊழியர்களை நீக்கியமை தொடர்பில் அந்த நாட்டு தொழிற்சாலை அதிகாரிகளுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.