பத்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள்..
இலங்கையில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தொழில்களை இழக்க நேரிடலாம் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று தாக்கம் காரணமாக இலங்கையில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் தொழில்களை இழக்கவோ அல்லது தொழில் வாய்ப்புக்களை பகுதி அளவில் இழக்கவோ நேரிடலாம் என நிபுணர்கள் மற்றும் துறைசார் வல்லுனர்கள் எதிர்வு கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நகரப் பகுதிகளில் நாள் சம்பளத்திற்கு பணியாற்றுவோரும், முறைசாரா துறைகளில் பணியாற்றுவோரும் இந்த நிலைமையினால் அதிகம் பாதிக்கப்படுவர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அநேகமான துறைகளில் பணிகள் பகுதியளவில் முன்னெடுக்கப்படுவதனால் பணியாளர்கள் தங்களது வருமானங்களை இழக்க நேரிடும் எனவும் இதனால் தொழிலாளர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான பணியாளர்கள் தொடர்பில் கவனம் செலுத்தி அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால் பாரதூரமான விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
தேசியப் பாதுகாப்பு பிரச்சினைக்கு நிகராக இந்தப் பிரச்சினையும் அபாயகரமானது என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-தமிழ்வின்-