பூமிக்கு அருகில் கருந்துளை : விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!!

581

கருந்துளை..

அண்டவெளியில் பூமிக்கு அருகில் கருந்துளை ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கருந்துளை பூமியில் இருந்து ஆயிரம் ஒளியாண்டுகளுக்கு அப்பால் அமைந்துள்ளது.

இரண்டு நட்சத்திரங்களில் பயணிக்கும் சுற்றுப் பாதையின் உதவியுடன் இந்த கருந்துளை கண்டறியப்பட்டுள்ளது. இதில் ஒரு நட்சத்திரம் கருந்துளையை சுற்றி பயணித்து வருகிறது. மற்றைய நட்சத்திரம் அதனை சுற்றி பயணிக்கின்றது.

தன்னை சுற்றியுள்ள வாயு மற்றும் தூசி கருந்துளைகள் உள்ளே இழுக்கும் போதே கருந்துளைகளை அடையாளம் காண முடியும். வாயு மற்றும் தூசியை உள்ளே இழுக்கும் போது அதிக வலுகொண்ட சமிக்ஞைகளை கருந்துளைகள் உமிழ்கின்றன.

அதனை தொலைநோக்கிகள் கண்டறிந்து கருந்துளைகள் இருக்கும் இடங்களை காட்டுகின்றன. இவ்வாறே கருந்துளைகள் கண்டறியப்படுகின்றன.

அவ்வாறின்றி கருந்துளைகளை நேரடியாக காண முடியாது. இதனடிப்படையில் பார்த்தால் புதிய கருந்துளையானது சாதாரண நிலைமையை விட மாறான நிலையில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய வானியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள இந்த கருந்துளைக்கு HR 6819 என பெயரிட்டுள்ளனர். நட்சத்திரம் ஒன்றில் சுற்றுப் பாதையின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட முதல் கருந்துளை இதுவாகும் என விஞ்ஞானிகள் தெரிவி்த்துள்ளனர்.