மோசமான அனுபவம்..
அமெரிக்காவில் கல்லூரி மாணவியின் தந்தை கொரோனா தொற்றால் உயிரிழந்த நிலையிலும் அவரின் பேராசிரியர்கள் இரக்கமின்றி நடந்து கொண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Maryland பல்கலைகழகத்தில் படிக்கும் மாணவியான Saige Kratensteinக்கு தான் கசப்பான அனுபவம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அவர் சமூகவலைதளத்தில்,
என் தந்தை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து என்னுடைய பேராசியருக்கு இமெயில் அனுப்பினேன், அதில் என் தந்தைக்கு இறுதிச்சடங்கு நடக்கவுள்ளது.
அதனால் என் படிப்பு தொடர்பான பிரஜக்டை சமர்பிக்க கூடுதல் அவகாசம் கேட்டேன். ஆதற்கு எனக்கு என்ன பதில் வந்தது தெரியுமா? சரியான நேரத்தில் அதைச் செய்ய முயற்சிக்கவும்,
நான் எல்லா மாணவர்களுடனும் இணக்கமாக இருக்க விரும்புகிறேன், ஏனென்றால் எல்லாருக்குமே கடினமான நேரங்கள் பல உள்ளன என கூறப்பட்டிருந்தது. இன்னொரு பேராசியரும் அதே தான் கூறினார்,
ஆனால் இறுதியாக என் நிலையை புரிந்து கொண்ட வேறு சில நல்ல உள்ளம் கொண்ட பேராசிரியர்கள் எனக்கு உதவினார்கள் என கூறியுள்ளார். இந்த நிலையில் இது தொடர்பாக பல்கலைக்கழகம் சார்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது.