இத்தாலியில் வீதி விபத்தில் தமிழ் இளைஞர் பலி!!

397

Accidentஇத்தாலியின் சிசிலி தீவில் அதிவேக நெடுஞ்சாலை ஒன்றில் சென்ற இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதில் இலங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

28 வயதான ரவிந்திரன் குலதீபன் லோகநாதன் என்ற இளைஞரே இந்த விபத்தில் பலியாகியுள்ளார் உயிரிழந்த இளைஞர் கடந்த முதலாம் திகதி மாலை பணி முடிந்து தங்குமிடத்திற்கு காரில் திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இளைஞர் ஓட்டிச் சென்ற வாகனத்திற்கு எதிரில் வேகமாக வந்த மற்றுமொரு வாகனம் இளைஞரின் வாகனத்தின் மீது மோதியுள்ளது.

இந்த விபத்து கோரமானதாக இருந்ததாகவும் விபத்தில் உயிரிழந்த இளைஞரின் சடலம் வாகனத்தில் சிக்கியிருந்ததுடன் மிகவும் சிரமத்துக்கு மத்தியில் அதனை மீட்டெடுத்ததாகவும் சிசிலி பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து சிசிலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.