கொரோனாவுடன் போ ராடிய கர்ப்பிணி : அறுவை சிகிச்சைக்கு தயாரான மருத்துவர்கள் : பின்னர் நடந்த அதிசயம்!!

552

கர்ப்பிணி..

ப்ளோரிடாவைச் சேர்ந்த கர்ப்பிணிப்பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட, மூச்சு விடவே திணறிக்கொண்டிருந்த அவருக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தையை மீட்டுவிட முடிவு செய்துள்ளனர் மருத்துவர்கள்.

ப்ளோரிடாவைச் சேர்ந்த Florette Johnsonஐ அறுவை சிகிச்சை அறைக்கு கொண்டு சென்ற மருத்துவர்கள் அவரது ஆக்சிஜன் அளவு குறைந்துகொண்டே வருவதைக் கவனித்துள்ளனர். அவர் மூச்சு விடத் திணறிக்கொண்டிருந்ததால், அவர்கள் அவரசரமாக அறுவை சிகிச்சைக்குத் தயாரகும்போது ஒரு அதிசயம் நிகழ்ந்துள்ளது.

கண்களை மூடி, கடவுளிடம், குழந்தை பெற்றெடுக்க பலம் கொடுங்கள் என்று பிரார்த்தனை செய்ய, அரை மணி நேரத்தில் அறுவை சிகிச்சையின்றி, சாதாரணமாகவே குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார் Florette.

ஆனால், Floretteக்கு கொரோனா இருந்ததால், குழந்தையைக் கொஞ்சுவதற்கு அவரை அனுமதிக்காமல் உடனடியாக குழந்தையை வேறு வார்டுக்கு கொண்டு சென்று விட்டனர் மருத்துவர்கள்.

அவளது முகத்தை நான் பார்க்கவோ, அவளைத் தொடவோ கூட இல்லை என்கிறார் Florette. அதற்குள் அவரது மூச்சுத்திணறல் அதிகமாகவே, தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் Florette.

Floretteஇன் அருகே வந்த ஒரு செவிலியர், கண்ணீர் மல்க Florette இறந்துகொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால், தனக்கு அழுகையோ பயமோ வரவில்லை என்கிறார் Florette. புதனன்று கண் மூடிய Florette, அடுத்த திங்களன்றுதான் கண் விழித்துள்ளார்.

தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்ளும் Florette, தன் மகளை வீடியோ அழைப்பு மூலம்தான் பார்க்க முடிந்தது என்கிறார்.

தனது அனுபவத்தை சமூக ஊடகம் ஒன்றில் அவர் வெளியிட, அது 27,000 லைக்குலையும், ஆயிரக்கணக்கான கமெண்ட்களையும் பெற்றுள்ளது. அனைவரும், அவர் விரைவில் குணமடைய வாழ்த்தியுள்ளார்கள்.