குவைத்தில் இலங்கைப் பெண் மீது பாலியல் துஸ்பிரயோகம்!!

705

Abuseபாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கைப் பெண்ணொருவர் குவைத் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

தனக்கு வேலை வாய்ப்பை பெற்று தந்த அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர், தன்னை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக இலங்கை பெண் ஹவாலி பொலிஸ் நிலையத்தில் செய்துள்ள முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சம்பவம் பற்றி பொலிஸில் முறைப்பாடு செய்தால் குவைத்தில் இருந்து வெளியேற்றுவதாகவும் அந்த அதிகாரி அச்சுறுத்தியுள்ளார்.

சம்பவம் குறித்து பொலிஸார் சந்தேக நபரிடம் விசாரணை நடத்தியுள்ளதுடன் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.