தொற்று நீக்கி மருந்து..
விசேட அ திரடிப் ப டையினர் மற்றும் வவுனியா நகரசபை என்பவற்றுக்கு தொற்று நீக்கி மருந்து விசிறும் கருவி வழங்கி வைக்கப்பட்டதுடன், எதிர்வரும் 11 ஆம் திகதி இயல்பு நிலையை ஏற்படுத்தும் பொருட்டு நகரை சுத்திகரிக்கும் நடவடிக்கையும் இன்று (08.05) காலை முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இடம்பெற்ற நகர சுத்திகரிப்பு ஆரம்ப நிகழ்வில் தொற்று நீக்கி மருந்து விசிறும் கருவி ஒன்று வவுனியா நகரசபைக்கு அரச அதிபர் சமன்பந்துல சேன அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன் வவுனியா வர்த்தக சங்கத்தினர் விசேட அ திரடிப் ப டையினருக்கு தொற்று நீக்கி கருவி ஒன்றையும் வழங்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து விசேட அ திரடிப் ப டையினர், வவுனியா நகரசபையினர், சுகாதார பரிசோதகர்கள் இணைந்து மாவட்ட அரச அதிபரின் மேற்பார்வையில் புதிய பேரூந்து நிலையம், வங்கிகள், பழைய பேரூந்து நிலையம்,
நகர கடைத்தொகுதிகள் உள்ளிட்ட நகரின் பல பகுதிகளிலும் நீர் விசிறப்பட்டும், தொற்று நீக்கி மருந்து தெளிக்கப்பட்டும் சுத்தம் செய்யப்பட்டது. எதிர்வரும் திங்கள் கிழமை முதல் வவுனியா மாவட்டம் வழமைக்கு திரும்பவுள்ள நிலையிலேயே இச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.