சுதந்திர தினத்தில் 700-800 சிறைக் கைதிகளுக்கு விடுதலை!!

679

Jailஇலங்கையின் 66வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகள் சிலர் விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் தலைமையகம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மன்னிப்புப் பெற்ற சிறைக் கைதிகள் நாளை (04) விடுதலை செய்யப்படுவர் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஜெ.பி.குலதுங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி பொது மன்னிப்புப் பெற்ற கைதிகளின் பெயர் விபரங்கள் சிறைச்சாலைகள் தலைமையகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதன்படி, 700-800 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக அவர் கூறினார்.