ஜார்க்கண்ட்டில் பள்ளிக்கு சென்ற ஏழு வயது சிறுவனை ஆசிரியர் பிரம்பால் அடித்து காயப்படுத்தியதில் அச்சிறுவன் பரிதாபமாக பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஞ்சி புறநகர் பகுதியில் ராஜ்கிய உக்ரமித் மத்ய வித்யாலயா என்னும் பள்ளியில் 7 வயதான சுஜித் என்ற சிறுவன் முதலாம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் வழக்கம் போல கடந்த 28 ஆம் திகதி பள்ளிக்கு சென்றுள்ளார். அன்று ஆசிரியர் அர்சாத் உசேன் கேள்வி கேட்டதற்கு பதில் அளிக்க தெரியாததால் ஆசிரியர் சுஜித்தை கடுமையாக பிரம்பால் அடித்தார்.
வலியில் துடித்த சுஜித்தை தொடர்ந்து அடித்த அவர் சோர்ந்து கீழே விழும்வரை அடிப்பதை நிறுத்தவில்லை. முதுகுப் பகுதியில் காயமடைந்த சுஜித் ஆசிரியர் அடித்தது குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார்.
தொடர்ந்து வலியால் அவதிப்பட்ட சுஜித்தை மருத்துவரிடம் அழைத்து சென்றும் பலயனில்லாமல் அச்சிறுவன் பரிதாபமாக பலியானான்.
இச்சம்பவம் குறித்து மாணவனின் தந்தை மகேதோ முன்டா பொலிசில் புகார் செய்தார். ஆசிரியர் பிரம்பால் அடித்ததால்தான் தனது மகன் இறந்ததாக போலீசில் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஆசிரியர் அர்சாத் உசேன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பொலிசார் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.




