நடுவானில் கோளாறான விமானம் : தரையில் விழுந்து வெ டித்து சி தறுவதற்கு முன் திறமையாக தப்பிய விமானி!!

534

நடுவானில்..

இந்திய விமானப்படையின் விமானம் பஞ்சாப் மாநிலத்தில் தரையில் விழுந்து வெ டித்து சி தறிய சம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் விமான தளத்திற்கு அருகே இப்விபத்து இடம்பெற்றுள்ளது. வழக்கம் போல காலை பயிற்சியில் ஈடுபட்ட இந்திய விமானப்படையின் மிக்-29, காலை 10:30 மணியளவில் அருகிலுள்ள கிராமத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

நடுவானில் விமானத்தில் ஏற்பட்ட தொழில் நுட்பக் கோளாறால் அது கட்டுப்பாட்டை இழந்ததுள்ளது. எனினும், விமானத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் விமானி அதிலிருந்து வெளியேறி பாரசூட் உதவியுடன் பத்திரமாக தரையிறங்கியுள்ளார்.

விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்து சாம்பலாகியுள்ளது. பின்னர் விமானி ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்கப்பட்டார். இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.