50000 பேர் கைது..
நாட்டில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய ஐம்பதாயிரம் பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறைத் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவுகையை தடுக்கும் நோக்கில் கடந்த மார்ச் மாதம் 20ம் திகதி முதல் அரசாங்கம் நாட்டில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தி வருகின்றது.
இந்த ஊரடங்குச் சட்ட காலத்தில் சட்டத்தை மீறி செயற்பட்ட சுமார் ஐம்பதாயிரம் பேரை காவல்துறையினர் இதுவரையில் கைது செய்துள்ளனர்.
இன்று காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரையில் மட்டும் சுமார் 255 பேர் ஊரடங்குச் சட்டத்தை மீறியமைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுவரையில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில் மொத்தமாக 12975 வாகனங்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.