12 கொரோனா நோயாளர்கள் தொடர்பான தகவல்!!

412

கொரோனா நோயாளர்கள்..

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகள் 12 பேரில் 10 பேர் கடற்படை சிப்பாய்கள் என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ஏனைய இருவரும் கடற்படையினருடன் நெருக்கமாக செயற்பட்டவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வைரஸ் தொற்றுக்குள்ளாகியதாக உறுதி செய்யப்பட்ட கடற்படை சிப்பாய்கள் 10 பேரும் அவர்களுடன் நெருக்கமாக செயற்பட்டவர்களும் தற்போது முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரையில் இலங்கையில் கொரோனா தொற்றிற்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 847ஆகும். அவர்களில் 578 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குணமடைந்த 260 பேர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ள நிலையில் 9 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.