நீண்ட தூர சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை : 1500 அரச பேருந்து தயார்!!

636

1500 அரச பேருந்து தயார்..

மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு அரசாங்கம் அனுமதியை வழங்கிய பின்னர் நீண்டதூர பேருந்து சேவைகள் மே 11ம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க அறிவித்துள்ளார்.

இதற்காக சேவையில் 1500 பேருந்துகள் மேலதிகமாக இணைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் வேலைத்தளங்களுக்கு பயணிக்கும் பணியாளர்கள் இந்த சேவைகளை பெற்றுக்கொள்ளமுடியும் என்றும் ரணவக்க தெரிவித்துள்ளார்.

இதற்காக நிறுவனங்கள் கோரிக்கைகளை அனுப்பவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதன்படி குறித்த கட்டணங்களின் அடிப்படையில் நிறுவனங்கள் தமது பணியாளர்களுக்காக போக்குவரத்து சேவைகளை பெற்றுக்கொள்ளமுடியும் என்றும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க அறிவித்துள்ளார்