பாண்டிராஜ் இயக்கும் படத்தில் சிம்பு – நயன்தாரா ஜோடியாக நடிக்கின்றனர். இப்படத்திற்கு இது நம்ம ஆளு என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இருவரும் காதலித்து, பிரிந்து பல வருட இடைவெளிக்கு பிறகு இப்படத்தில் இணைகிறார்கள். இவர்கள் சம்பந்தப்பட்ட காட்சி சென்னை ஸ்டூடியோக்களில் படமாகி வருகிறது. பழைய நட்பை இருவரும் புதுப்பிதுள்ளனர்.
சிம்புவும் ஹன்சிகாவும் ஒருவரையொருவர் காதலிப்பதாக ஏற்கனவே அறிவித்தனர். தற்போது நயன்தாராவும் சிம்புவும் சேர்ந்து நடிப்பதால் ஹன்சிகா கோபமடைந்து இருப்பதாகவும் இதனால் அவர்கள் காதலில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் பரவி உள்ளன.
இந்த நிலையில் சிம்புவுடன் இப்படத்தில் இன்னொரு நாயகியாக நடிக்க ஹன்சிகாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அவர் ஏற்பாரா என்று தெரியவில்லை.
படத்தின் கதை பற்றி பாண்டிராஜ் கூறும்போது, சிம்பு ஒரு பெண்ணை காதலிப்பார். அது தோல்வியில் முடியும், அதன் பிறகு நயன்தாராவுடன் திருமண நிச்சயதார்த்தம் நடக்கும். திருமணத்துக்கு ஆறு மாதங்கள் இருக்கும் நிலையில் அவர்களுக்குள் எப்படி காதல் மலர்கிறது என்பது கதை என்றார்.
இதில் சிம்புவின் காதலி கரக்டரில் நடிக்க தான் ஹன்சிகாவை, அழைத்துள்ளார். இதில் நடிப்பதா வேண்டாமா என்ற யோசனையில் ஹன்சிகா இருக்கிறார்.





